செய்திகள்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

வேலூரில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்

Published On 2020-06-19 13:01 GMT   |   Update On 2020-06-19 13:01 GMT
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

* வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும்.

* காய்கறி, மளிகைக்கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.

* இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.

* மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இரவு 10 முதல் காலை 6 வரை இயங்கும்.

* ஓட்டல், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.

* மருந்துக்கடைகள், பெட்ரோல், பங்க்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும்.

* மேலும் வேலூரில் உள்ள அழகு நிலையம், முடிதிருத்தும் நிலையம், ஸ்பா ஆகியவற்றை ஜூன் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News