செய்திகள்
டாக்டர்கள் வேலைநிறுத்தம்

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 700 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்

Published On 2019-08-27 06:26 GMT   |   Update On 2019-08-27 06:26 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 700 அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்பட 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் 450 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் டாக்டர்கள் பணியில் இருந்தனர். இதுதவிர உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சைகள் திட்டமிட்டபடி நடந்தன.

புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் யாரும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சில ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், ஆரணி, தண்டராம்பட்டு உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல செயல்பட்டன. புறநோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News