செய்திகள்
மழை

வேலூரில் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2019-08-17 08:21 IST   |   Update On 2019-08-17 08:21:00 IST
கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.
சென்னை:

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த முதல் மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.



கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 18.7 செ.மீ, போளூரில் 10.7 செமீ மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

Similar News