செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி

Published On 2019-05-24 13:10 IST   |   Update On 2019-05-24 13:28:00 IST
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர்:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அரக்கோணம் தொகுதியில் 14,94,929 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,45,831 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. சார்பில் எஸ்.ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3,40,574 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் 66 ஆயிரத்து 360 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாவேந்தன் 28 ஆயிரத்து 897 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 23 ஆயிரத்து 530 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News