செய்திகள்

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுக செல்வாக்கு இழந்து விட்டது - முரளிதர ராவ்

Published On 2019-02-28 03:45 GMT   |   Update On 2019-02-28 03:45 GMT
கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP
தென்தாமரைகுளம்:

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்த பிறகும் அவர்களுடைய கூட்டணி கட்சி தலைவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது.



இந்த பாராளுமன்ற தேர்தலில் “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முத்திரை வாசகத்தை பயன்படுத்தி எங்கள் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP

Tags:    

Similar News