செய்திகள்

குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரிகளில் கடத்திய 5 டன் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2019-02-20 06:42 GMT   |   Update On 2019-02-20 06:42 GMT
குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரிகளில் கடத்திய 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி:

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல இடங்களில் குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இவை வடமாநிலங்களில் இருந்து கடத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்வதாக தெரிகிறது.

இந்த நிலையில் பூந்தமல்லி அருகே லாரிகளில் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் போலீசார் இன்று காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே பெங்களூர் நெடுஞ்சாலை பாரிவாக்கம் ஜங்‌ஷனில் 2 லாரிகளில் இருந்த பொருட்களை சிலர் லோடு ஆட்டோவில் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ய சென்ற போது லோடு ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

2 லாரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து சுமார் 5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும்.

லாரியில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 2 லாரி மற்றும் லோடு ஆட்டோ பறிதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட 2 லாரிகளும் குஜராத் பதிவு எண் கொண்டது. குஜராத்தில் இருந்து அவர்கள் குட்கா, புகையிலையை கடத்தி வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கைதான 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News