செய்திகள்

அரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2019-02-17 03:02 GMT   |   Update On 2019-02-17 03:02 GMT
‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பேடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #GovernorKiranbedi
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரோட்டிலேயே உணவு சாப்பிட்டு இரவு சாலையிலேயே தூங்குகிறார்கள்.

போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



கவர்னர் கிரண்பேடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பேடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.

எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.

இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #GovernorKiranbedi
Tags:    

Similar News