செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தற்கொலை

Published On 2019-02-04 15:21 GMT   |   Update On 2019-02-04 15:21 GMT
ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் வைகை அணை பொதுப்பணித்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சாருக்கா பாண்டிஸ்ரீ (வயது16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சாருக்கா பாண்டிஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகளை அவரது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

செல்போனில் அதிகம் பேசுவது, விளையாடுவது போன்றவற்றால் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் மனதளவிலும் பாதிக்கப்படும் அவர்கள் சிறிய ஏமாற்றத்தை கூட தாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே இளம்வயதில் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News