செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

Published On 2019-01-07 09:50 GMT   |   Update On 2019-01-07 09:50 GMT
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

ஜனவரி 28-ந்தேதி நடை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்ட மன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல்ஆணையம் ஒன்பது காரணங்களை கூறியிருக்கிறது.

இந்தக் காரணங்கள் அனைத்தும்நியாயமானவை. ஆனால் புதியவை அல்ல. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பும் இதே காரணங்கள் இருந்தன. அப்போது ஏன் இந்தக் காரணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வில்லை என்ற நியாயமான கேள்வி எழும்புகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்திய அறிவிப்பு வெளியிடும் வரையில் ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகஉள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தேர்தல் செலவினங்களும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புள்ளது அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது இல்லை எனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலை நடத்துவது தான் அறிவுடைமையாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ThiruvarurByElection

Tags:    

Similar News