செய்திகள்

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தந்தை-மகன் கைது

Published On 2019-01-05 06:25 GMT   |   Update On 2019-01-05 06:25 GMT
சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, ஜன.5-

சென்னை துறைமுகத் தில் வேலை வாங்கித்தரு வதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பேரையூர் முடக்கு சாலையைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன்அருள் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

இந்த நிலையில் திண்டுக் கல்லைச் சேர்ந்த 2 பேர் முத்து ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருகிறோம். அதற்கு பணம் செலவாகும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பிய முத்து ராமலிங்கம், அவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் கொடுத்தார். இருப்பினும் அவர்கள் கொடுத்த வாக்கு றுதியின்படி சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தரவில்லை.

முத்துராமலிங்கத்திடம் வாங்கிய பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்ட னர். இது தொடர்பாக முத்துராமலிங்கம் பேரையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பண மோசடி செய்தவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட் டம், எரியோட்டைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (56) என்பதும், தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

சவுந்தர்ராஜனுக்கு உடந்தையாக அவரது மகன் தனராஜ் (34) இருந்துள்ளார். இதையடுத்து தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News