செய்திகள்

புதிய சாலைகள்- மேம்பாலங்கள்- ஆற்றுப்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2018-12-12 09:59 GMT   |   Update On 2018-12-12 09:59 GMT
எட்டையபுரம், நாங்குநேரி மற்றும் திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில் பட்டி, திட்டங்குளம் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி கோவில்பட்டி எட்டையாபுரம் விளாத்திக்குளம் வேம்பார் சாலைப் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நாங்குநேரி பரதர் உவரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி; சீதைக்குறிச்சி வாள்வீச்சு ரஸ்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; கடலூர் சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; சென்னை திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், நெடுஞ்சாலைத் துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News