செய்திகள்

பல்லாவரத்தில் அண்ணனுக்கு பன்றி காய்ச்சல்- தங்கை தீக்குளித்து தற்கொலை

Published On 2018-11-01 12:16 IST   |   Update On 2018-11-01 12:16:00 IST
பல்லாவரத்தில் அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மல், அண்ணா நகர் நல்லதம்பி சாலையை சேர்ந்தவர் சீதாபதி (வயது 65). இவரது தங்கை சுமதி (60). இவர் தனது அண்ணன் சீதாபதியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சீதாபதிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் சீதாபதிக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரிகிறது. இதைஅறிந்த சுமதி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

தனக்கு ஆதரவாக இருந்த அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் மிகவும் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சுமதி வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகிய அவர் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுமதியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News