செய்திகள்

கல்பாக்கம் அருகே ஆசிரியர்கள் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2018-10-31 12:28 IST   |   Update On 2018-10-31 12:28:00 IST
கல்பாக்கம் அருகே ஆசிரியர்கள் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்தவர் ரகு, கூலித்தொழிலாளி. இவரது மகள் இந்துஷ்ரி (வயது 13). வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் நடக்கும் முக்கிய பாட வகுப்புகளை மாணவி இந்துஷ்ரி புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் கண்டித்தனர். மேலும் இது பற்றி இந்துஷ்ரியின் பெற்றோரிடமும் கூறினர்.

இதில் மனவேதனை அடைந்த இந்துஷ்ரி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மாணவியின் உறவினர்கள் ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம் போலீசார் மாணவியின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News