செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2018-09-13 15:23 IST   |   Update On 2018-09-13 15:23:00 IST
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள், பூஜை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
போரூர்:

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள், பூஜை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை பூக்கள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். பூக்கள் விலை அதிகரிப்பால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வந்த மல்லி தற்போது ரூ. 1,350-க்கும் ரூ. 500-க்கு விற்கப்பட்டு வந்த முல்லை தற்போது ரூ. 1000-க்கும் விற்கப்படுகிறது.

மற்ற பூக்களின் விலை விவரம் (கிலோ) வருமாறு:-

பன்னீர் ரோஸ் -ரூ. 200
சாக்லெட்ரோஸ்- ரூ.150
மல்லி - ரூ.1,350
முல்லை- ரூ.1000
சாமந்தி - ரூ.180
சம்பங்கி-  ரூ.250
கனகாம்பரம் -ரூ.700
அரளி - ரூ.250
ஜாதிமல்லி - ரூ.500

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ரவி கூறும்போது, ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், நிலக்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 12 முதல் 15 லாரிகளில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

ஆனால் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதாலும், நேற்றைய தினம் சுபமுகூர்த்த தினம் என்பதாலும் வழக்கத்தை விட அதிகமாக பூக்களின் வரத்து கடந்த இரண்டு நாட்களாக 25 முதல் 30 லாரிகளில் வந்துள்ளது.
Tags:    

Similar News