செய்திகள்
வசந்தகுமார்

கும்மிடிப்பூண்டியில் பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2018-09-03 08:05 GMT   |   Update On 2018-09-03 08:05 GMT
கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச்சேர்ந்த ஜெகன்நாதன் மகன் வசந்தகுமார்(19). இவர் பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று வசந்தகுமார், கும்மிடிப்பூண்டி அருள் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கும்மிடிப்பூண்டி ரெட்டம் பேடு சாலை சந்திப்பின் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.

பலத்த காயம் அடைந்த வசந்தகுமார், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்க நேற்று இரவு சென்றனர். மீன்வாங்கிக் கொண்டு இன்று காலை திருவள்ளூர் ஜே.என்.சாலை பஸ் டிப்போ டெம்போவில் திரும்பினார்கள்.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டெம்போ லாரி மீது மோதியது. இதில் நாகம்மாள், லலிதா, கோவிந்தம்மாள் , ரோசி, தனலட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த எல்லம்மாள், கதிர்வேலு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் டவுன் போலீ சார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News