செய்திகள்
மதுரை சிறையில் இருந்து விடுதலையான கைதிகள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா- மதுரை சிறையில் இருந்து 16 கைதிகள் விடுதலை

Published On 2018-08-04 10:20 IST   |   Update On 2018-08-04 10:20:00 IST
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary #TNGovernment
மதுரை:

தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள்தோறும் கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதன்பேரில் தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 16 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைவாசலில் உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். #MGRCentenary #TNGovernment
Tags:    

Similar News