செய்திகள்

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து விஜயகுமார் எம்.பி. நீக்கம்

Published On 2018-08-02 10:41 IST   |   Update On 2018-08-02 10:41:00 IST
கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.விஜயகுமார் எம்.பி. அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். #ADMK
சென்னை:

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.விஜயகுமார் எம்.பி. அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சி நிர்வாக வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளும், மேற்கு மாவட்டத்தில் பத்மநாபபுரம், விளவன் கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கி செயல்படும்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக எஸ்.ஏ. அசோகன், மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஜான் தங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் தச்சை என்.கணேசராஜா நியமிக்கப்படுவதாகவும், கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்ந்து விட்டதால் அவருக்கு பதில் தற்போது கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK
Tags:    

Similar News