செய்திகள்

தீவிரம் அடையும் கன மழை - பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2018-07-16 05:44 GMT   |   Update On 2018-07-16 05:44 GMT
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
கூடலூர்:

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 5653 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1800 கன அடி திறக்கப்படுகிறது.

இதில் 1400 கன அடி மின்சார உற்பத்திக்கும், 400 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.



வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 1169 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 1782 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 129.68 அடியாகவும் உள்ளது.

பெரியாறு 84, தேக்கடி 65, கூடலூர் 10.2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 2.5, மஞ்சளாறு 5, வைகை அணை 7.4, சோத்துப்பாறை 3, மருதாநதி 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam

Tags:    

Similar News