செய்திகள்

திருப்பத்தூர் அருகே கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: வாலிபர் கைது

Published On 2018-06-27 11:52 GMT   |   Update On 2018-06-27 11:52 GMT
கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளத்தை சேர்ந்தவர் சின்னசேட்டு மகன் ரமேஷ் (வயது36). திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டார்.

இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு வந்தார். திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கடைக்கு சென்று கலர் ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரத்தை விலைக்கு வாங்கினார்.

அவரது வீட்டுக்கு எந்திரத்தை கொண்டு சென்ற அவர் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை உண்மையான ரூபாய் நோட்டுகள் போல மாற்றினார்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் அருள் மற்றும் போலீசார் இன்று புது பூங்குளம் கிராமத்துக்கு சென்றனர். அப்போது ரமேஷ் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரமேசை கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்து 80 கள்ள 100 ரூபாய் நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ரமேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் பகுதியில் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கபட்டதை பார்த்து தானும் அது போல ஈடுபட்ட தாக ரமேஷ் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News