செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் அமைச்சர்கள் உள்ளனர்- திண்டுக்கல் லியோனி

Published On 2018-06-25 05:18 GMT   |   Update On 2018-06-25 05:18 GMT
தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் அமைச்சர்கள் உள்ளதாக திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார். #DMK #Dindigulleoni
அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி மேல வாணியத்தெருவில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி கழகச் செயலாளர் என்.நாசர் தலைமை தாங் கினார்.

கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு யாருக்கும் சொந்தம் என்பதே இதுவரை தெரியவில்லை. ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி திரைப்படத்தில் கதை- வசனம் எழுதி சம்பாதித்து கட்டிய தனது கோபாலபுரம் வீட்டை தனக்கு பிறகு மருத்துவமனை அமைக்க எழுதி கொடுத்துள்ளார்.

சாதி மதங்களை கடந்து தமிழக மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கியவர் கருணாநிதி தான். அதற்கு எடுத்துக்காட்டாக தான் தமிழக முழுவதும் சமத்துவ புரங்களை உருவாக்கினார்.

அழகான வார்த்தைகளைக் கொண்டு பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். தாம் பிரதமராக பதவியேற்றவுடன் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்றார். கொண்டு வந்தாரா? மோடி தமிழகத்தை சாதியாலும், மதத்தாலும் வேறுபடுத்த நினைக்கிறார். அது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது.



மு.க.ஸ்டாலின் நாடகம் போடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் உண்மையிலேயே நாடகமாடியவர்கள் தற்போதுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது வாய்விட்டு கதறி கண்ணீர் சிந்தியபடி பதவி ஏற்ற அவர்கள் ஜெயலலிதா இறந்தபிறகு ஒரு சொட்டுக் கூட கண்ணீர் விட வில்லையே.. ஏன்? இது நாடகம் இல்லையா?

தற்போது தமிழக அமைச்சர்கள் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் உள்ளனர். இதனால் தான் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு நல்ல தல்ல.

இவ்வாறு அவர் பேசினார். #DMK #Dindigulleoni
Tags:    

Similar News