செய்திகள்

ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கருணாநிதி

Published On 2018-06-20 10:55 IST   |   Update On 2018-06-20 10:55:00 IST
தி.மு.க. தலைவர் கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Karunanidhi
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்பை விட நன்றாக உள்ளதால் அவ்வப்போது அவரை வெளியில் அழைத்து செல்கின்றனர்.

கடந்த வாரம் அறிவாலயம் சென்ற கருணாநிதி 2 நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மகன் மு.க.தமிழரசு வீட்டுக்கு சென்று வந்தார்.

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நேற்றிரவு 8 மணி அளவில் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு கருணாநிதி சென்றார்.

அவரை ராஜாத்தி அம்மாளும், மகள் கனிமொழி எம்.பி.யும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜாத்தி அம்மாளுக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

கருணாநிதிக்கு ராஜாத்தி அம்மாள் மாலை அணிவித்து ஆசி பெற்றார்.

சுமார் 1½ மணி நேரம் அங்கிருந்த கருணாநிதி இரவு 9.30 மணி அளவில் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.  #Karunanidhi
Tags:    

Similar News