என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajathi ammal"

    • கருணாநிதி மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது.
    • ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. அவரால் சரிவர சாப்பிட முடியாத அளவுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது. வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்து வந்தது.

    இதனால் ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    அதனை ஏற்று ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். அவருடன் கனிமொழி எம்.பி., பேரன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்பை விட நன்றாக உள்ளதால் அவ்வப்போது அவரை வெளியில் அழைத்து செல்கின்றனர்.

    கடந்த வாரம் அறிவாலயம் சென்ற கருணாநிதி 2 நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மகன் மு.க.தமிழரசு வீட்டுக்கு சென்று வந்தார்.

    கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நேற்றிரவு 8 மணி அளவில் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு கருணாநிதி சென்றார்.

    அவரை ராஜாத்தி அம்மாளும், மகள் கனிமொழி எம்.பி.யும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜாத்தி அம்மாளுக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    கருணாநிதிக்கு ராஜாத்தி அம்மாள் மாலை அணிவித்து ஆசி பெற்றார்.

    சுமார் 1½ மணி நேரம் அங்கிருந்த கருணாநிதி இரவு 9.30 மணி அளவில் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.  #Karunanidhi
    ×