என் மலர்
நீங்கள் தேடியது "ராஜாத்தி அம்மாள்"
- நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராஜாத்தி அம்மாளுக்கு அண்மை காலமாக அஜீரண கோளாறு-வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அவரை கனிமொழி எம்.பி. உடன் இருந்து கவனித்து வருகிறார்.
- கருணாநிதி மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது.
- ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. அவரால் சரிவர சாப்பிட முடியாத அளவுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது. வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்து வந்தது.
இதனால் ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
அதனை ஏற்று ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். அவருடன் கனிமொழி எம்.பி., பேரன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.






