செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சிக்க வேண்டும்- பேராசிரியர் ஜெயராமன்

Published On 2018-06-07 09:59 IST   |   Update On 2018-06-07 09:59:00 IST
தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். #NEET
திருவாரூர்:

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் உயிர் பலி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனிதா, பிரதீபா, இதே போன்று டெல்லி, ஹைதராபாத்திலும் மாணவர்கள் பலியாகி வருகின்றனர். நீட்டால் ஆண்டுதோறும் மாணவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்.

மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்விகள் கேட்பதின் மூலம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் நீட் தேர்வில் வெற்றி பெறும் நிலையை உருவாக்குகிறது. இதனால் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சேருவதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிறது.

இதன் மூலமாக தமிழ் மொழி மற்றும் தமிழக கல்வி திட்டத்தை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே சி.பி.எஸ்.இ பாடத்திற்கு செல்வதை தடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு நடத்த கூடாது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது.

இந்திய அரசியலமைப்பு 371-ன் படி ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளது. தற்போது 371-கே என்ற சிறப்பு பிரிவினை சேர்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து விடும்.

எனவே தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #NEET
Tags:    

Similar News