செய்திகள்
கைது செய்யப்பட்ட கராத்தே ராமகிருஷ்ணன்.

தேனி அருகே முதல்வரை முகநூலில் விமர்சித்த தி.மு.க. நிர்வாகி கைது

Published On 2018-06-06 05:04 GMT   |   Update On 2018-06-06 05:04 GMT
முகநூலில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறாக விமர்சித்த கம்பம் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் தி.மு.க. நகர துணைச் செயலாளராக இருப்பவர் கராத்தே ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி உள்பட பல்வேறு சம்பவங்களில் சரியாக செயல்படவில்லை என்று தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

மேலும் அவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இது குறித்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முகநூலில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக தி.மு.க. நிர்வாகியை கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே இது குறித்து செயல் தலைவரிடம் எடுத்து கூறி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். #Tamilnews

Tags:    

Similar News