செய்திகள்

தூத்துக்குடியில் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Published On 2018-05-24 17:11 GMT   |   Update On 2018-05-24 17:12 GMT
தூத்துக்குடியில் பதற்றம் இன்னும் தனியாத நிலையில் மேலும் நாளை காலை 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று முன்தினம் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான நிலை இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களாகியும் இதுவரை அமைதி முழுவதுமாக திரும்பவில்லை. கடைகளை திறப்பதற்கான முயற்சிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட நாளை காலை (25-ந்தேதி) 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் மேலும் மூன்று நாட்கள் 144 நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
Tags:    

Similar News