செய்திகள்

தூத்துக்குடி சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள் முறையீடு

Published On 2018-05-23 15:09 IST   |   Update On 2018-05-23 15:09:00 IST
ஐகோர்ட்டு வக்கீல்கள் ரஜினி, கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிட்டனர். #MaduraiHighcourt #Thoothukudifiring
மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இன்று காலை மதுரை ஐகோர்ட்டில் வழக்கம்போல் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார் ஆகிய அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது.

அப்போது ஐகோர்ட்டு வக்கீல்கள் ரஜினி, கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிட்டனர். அதற்கு இந்த சம்பவம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறினர். #MaduraiHighcourt #Thoothukudifiring
Tags:    

Similar News