செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சட்டத்திற்கு புறம்பான வரம்பு மீறிய மிருகத்தனமான செயல் - ரஜினி காந்த்

Published On 2018-05-23 08:24 GMT   |   Update On 2018-05-23 08:24 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi #Rajinikanth
சென்னை :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது :-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டகாரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூடு, சட்டத்திற்கு புறம்பான வரம்பு மீறிய மிருகத்தனமான செயல், இதைதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த துப்பாக்கிச்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Bansterlite #SaveThoothukudi #Rajinikanth
Tags:    

Similar News