செய்திகள்

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் முற்றுகை- 75 பேர் கைது

Published On 2018-05-17 08:06 GMT   |   Update On 2018-05-17 08:06 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்தியது தொடர்பாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் மற்றும் முல்லை பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு கலெக்டர் அலுவலக மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தேசிய கூட் டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளாக அரவை செய்த கரும்பு கொள்முதல் தொகை ரூ. 212 கோடியை உடனே வழங்க வேண்டும்.

தமிழக அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது. கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத் தலைவர்கள் பழனிச்சாமி, முருகன், அப்பாஸ் மற்றும் 75-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News