செய்திகள்

கல்லறை தோட்ட சுற்றுச்சுவரை உடைத்து உடல் புதைப்பு - கொலை செய்யப்பட்டவரா?

Published On 2018-05-10 15:39 IST   |   Update On 2018-05-10 15:39:00 IST
திருவள்ளூர் அருகே கல்லறை தோட்ட சுற்றுச்சுவரை உடைத்து அடக்கம் செய்யப்பட்ட உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் அற்புத ஜெப கோபுர தேவாலயம் உள்ளது.

இந்த தேவாலயத்தின் கல்லறைத் தோட்டம் ஒண்டிக்குப்பத்தில் கூவம் ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கல்லறைத் தோட்டத்தின் இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருந்தது. சுற்றுச்சுவரும் 6 இடங்களில் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அங்கு ஒரு இடத்தில் புதிதாக அடையாளம் தெரியாத உடல் புதைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாலய நிர்வாகிகள் மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அடக்கம் செய்யப்பட்ட உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News