செய்திகள்

சார்ஜாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 1 கிலோ தங்கம் சிக்கியது

Published On 2018-03-12 12:04 IST   |   Update On 2018-03-12 12:04:00 IST
சார்ஜாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பயணிகள் இருக்கையின் கீழ் 1 கிலோ தங்கம் சிக்கியது. இது குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் பார்சல் ஒன்று கிடந்தது. சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அதனை பிரித்து பார்த்தனர்.அதில் 1 கிலோ தங்க கட்டி இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பயணிகள் போல் மர்ம நபர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பதும், அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து அதனை விமானத்திலேயே விட்டு தப்பி சென்று இருப்பதும் தெரிந்தது.

தங்க கட்டி கிடந்த இடம் அருகே உள்ள இருக்கையில் பயணம் செய்த பயணிகள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews

Similar News