செய்திகள்

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 20 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Published On 2018-03-09 12:03 IST   |   Update On 2018-03-09 12:03:00 IST
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரிடம் விசாரணை நடைபெறுகிறது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது சூட்கேசை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

அமெரிக்க டாலர் அவருக்கு எப்படி? கிடைத்தது. யாருக்காக கடத்தப்படுகிறது என்பது குறித்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews

Similar News