செய்திகள்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது

Published On 2018-03-05 12:03 IST   |   Update On 2018-03-05 12:03:00 IST
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு அந்தோதியா ரெயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. இந்த ரெயிலுக்கு முன்பதிவு கிடையாது.
தாம்பரம்:

தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக எற்கனவே அறிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் இங்கிருந்து இயக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது,

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக 3-வது முனையமான தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன் பதிவு இல்லாத அந்தோரியா ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு அந்தோதியா ரெயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது.

தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை காலை 7 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்று இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது. அதேபோல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

இந்த ரெயிலில் பயணிகள் பயணம் செய்வதற்காக 16 பெட்டிகள் உள்ளன. இந்த ரெயிலுக்கு முன்பதிவு கிடையாது.

இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். தினசரி ரெயிலாக இதை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த ரெயிலை இன்று காலை தாம்பரம் ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இன்று காலை 7 மணிக்கு ரெயில் புறப்பட இருந்த நிலையில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் திடீர் பழுது ஏற்பட்டது.

இதை ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் அரைமணிநேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. முதல் நாளில் இந்த ரெயிலில் தாம்பரத்தில் இருந்து 50 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். #tamilnews

Similar News