செய்திகள்
ஆணவ கொலையை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும்: திருமாவளவன் பேட்டி
ஆணவக்கொலையை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #thirumavalavan
விருத்தாசலம்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று விருத்தாசலம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூரில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு நீதிவிசாரணை நடத்தவேண்டும். ஆணவக்கொலையை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் விடுவிக்கப்படவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிலாவது ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கோரி பிரதமரை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #thirumavalavan