செய்திகள்

திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது: 17 பேர் படுகாயம்

Published On 2017-12-23 12:16 IST   |   Update On 2017-12-23 12:16:00 IST
திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் வேன் இன்று காலை மானாம்பதி வழியாக திருப்போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

வேனில் 14 பெண்கள் உள்பட 17 பேர் இருந்தனர். வேனை இரும்புலிச்சேரியை சேர்ந்த அசோக் ஓட்டிச் சென்றார்.காலை 7 மணி அளவில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமம் அருகே வந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது.

வேனில் வந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி அலறினர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் வேனில் இருந்த அனைவரையும் வேன் கதவை உடைத்து மீட்டனர். இதில் டிரைவர் அசோக்கின் இடுப்பு எலும்பு முறிந்தது.

தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News