தமிழ்நாடு செய்திகள்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறுமா? - திருமாவளவன் விளக்கம்

Published On 2026-01-28 10:42 IST   |   Update On 2026-01-28 10:42:00 IST
  • ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.
  • கூட்டணியில் கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை

அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையலாம் என்று தகவல் வெளியானது.

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய திருமாவளவன், "பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம். பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கூட்டணியில் ராமதாஸ் இணைவது பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

தற்போது மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள திருமாவளவன், "கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. சாதிய, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்ற நிலைப் பாட்டில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதன்மூலம் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்பதை திருமாவளவன் மீடனும் உறுதிப்படுத்தியுள்ளார். 

Tags:    

Similar News