செய்திகள்
மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி 50 அடி தூரத்தில் சரிந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சந்திரசேகர் (வயது27) டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ரவிக்குமாருடன்(26) பைக்கில் மாமல்லபுரத்தில் இருந்து வெண்புருஷம் நோக்கி சென்றார்.
கொக்கிலமேடு சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி 50 அடி தூரத்தில் சரிந்தபடி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகரும், ரவிக்குமாரும் உயிருக்கு போராடினர். அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்காக ஒரு மணிநேரம் காத்துக்கிடந்தனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் 2 பேரையும் ஷேர் ஆட்டோவில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் உயிரிழந்தார்.
ரவிக்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதியில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததே பல உயிர் இழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.