செய்திகள்

தலைமை செயலகத்தில் வெங்கையாநாயுடு ஆய்வு கூட்டம் நடத்தியது தவறு அல்ல: தம்பிதுரை

Published On 2017-05-15 13:25 IST   |   Update On 2017-05-15 13:25:00 IST
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி, அங்கேயே ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவொரு தவறும் இல்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் அதை சில சங்கங்கள் ஏற்று கொள்ளாததால் போராட்டம் உருவாகி இருக்கிறது. போக்குவரத்து அமைச்சர், மீண்டும் தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சொல்லி இருக்கிறார்.

தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு சரியான முறையில் மேற்கொண்டு வருகிறது.



மத்திய மந்திரி வெங்கையா நாயுடு முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி அங்கேயே ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவொரு தவறும் இல்லை. நானும் கூட பல மாநிலத்தின் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறேன், கலந்து கொண்டும் இருக்கிறேன்.

மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News