செய்திகள்

தாம்பரத்தில் தலைமை செயலக ஊழியர் தற்கொலை

Published On 2017-05-13 15:37 IST   |   Update On 2017-05-13 15:37:00 IST
தாம்பரத்தில் தலைமை செயலக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

மேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரில் வசித்து வந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது35).

சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஸ்டாலின் (6) என்ற மகனும், ரோஸ்லின் (4) என்ற மகளும் உள்ளனர்.

தீபன் சக்கரவர்த்தி கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். மனைவி கடைக்கு சென்று இருந்தார். குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர்.

கடைக்கு சென்று திரும்பிய சுதா திரும்பி வந்தபோது தீபன் சக்கரவர்த்தி மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை செய்த இடத்தில் அவருக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததா? வேலை பளுவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.

Similar News