செய்திகள்
மானாமதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் அமுதசெல்வி (வயது 40). இவர் திருச்சி ரெயில்வே போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அமுதசெல்வி வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமுதசெல்வி எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமுதசெல்வியின் கணவர் ராஜபாண்டி முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.