செய்திகள்
விபத்துக்குள்ளான கார்.

அ.தி.மு.க. எம்.பி. கார் மோதி மாடு பலி

Published On 2017-04-27 14:35 IST   |   Update On 2017-04-27 14:35:00 IST
சிவகங்கை அ.தி.மு.க. எம்.பி. கார் மோதிய விபத்தில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. டிரைவர் முத்துக்கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
தேவகோட்டை:

சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் செந்தில்நாதன். இவர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நேற்று இரவு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டார்.

அவரை காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்து செல்வற்காக கார் டிரைவர் முத்துகிருஷ்ணன் (வயது 32) இன்று காலை புறப்பட்டார்.

தேவகோட்டை அருகே உடப்பன்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், ராம்நகர் பகுதியில் வந்தபோது எதிரே 2 மாடுகள் வந்தன.

எதிர்பாராதவிதமாக மாடுகள் மீது கார் மோதியது. அதே வேகத்தில் சாலையோர மரத்தின் மீதும் கார் மோதியது.

இந்த விபத்தில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த டிரைவர் முத்துக்கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.




Similar News