செய்திகள்

பரங்கிமலையில் குப்பை தொட்டியில் கிடந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Published On 2017-03-23 10:00 GMT   |   Update On 2017-03-23 10:00 GMT
பரங்கிமலையில் பழைய ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:

பரங்கிமலையை அடுத்த மடுவாங்கரையில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குவியலாக கிடந்தது.

குப்பைகளை கொட்ட வந்த பொதுமக்கள் இதை பார்த்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை தொட்டியில் கிடந்த பழை ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தது. ஆனால் சிலர் பணத்தை மாற்ற முடியாமல் இருந்தனர்.

காலஅவகாசம் முடிந்ததால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவற்றை சிலர் இது போன்று துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி வருகிறார்கள்.

பரங்கிமலையில் பழைய ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியவர்கள் யார்? என்று போலீ சார் விசாரித்து வருகிறார் கள்.

Similar News