செய்திகள்
புதுக்கோட்டை அருகே விவசாயி மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை அருகே நெற்பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏகனிவயல் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 64). இவரது மனைவி ரோஜாமாணிக்கம். இவர்களுக்கு பிலோமின் ராஜ், சேவியர் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
ஞானசுந்தரத்திற்கு சொந்தமாக அப்பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் குத்தகைக்கு 3 ஏக்கர் நிலம் எடுத்திருந்தார். அதில் அவர் நெல் பயிரிட்டு வந்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து நேரடி நெல் விதைப்பு முறையில் பயிர் செய்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் கிடைக்காததாலும் அவர் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. இதனால் அவர் மிகவும் மனமுடைந்தார். மேலும் இது பற்றி தனது மனைவி, மகன்களிடமும், உறவினர்களிடமும் கூறி வந்தார்.
இந்நிலையில் ஞான சுந்தரம் தனது வயலில் மாடுகள் மேயாமல் இருப்பதற்காக நேற்று மாலை வயலுக்கு சென்று பார்த்தார். அப்போது திடீரென அங்கு சுருண்டு விழுந்தார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசுந்தரம் இறந்தார். நெற்பயிர்கள் கருகியதால் மனமுடைந்து இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெற்பயிர்கள் கருகியதன் காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகும் சம்பவங்களும், தற்கொலை செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கியில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.