செய்திகள்
ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காமநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60).அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். மேலும் 1980- ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் கலியமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.