செய்திகள்
11 அடி உயர கீரைத்தண்டு

குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு

Published On 2016-10-09 17:29 IST   |   Update On 2016-10-09 17:29:00 IST
குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய செடிகளையும், மூலிகைகளையும் வளர்த்து வருகிறார்.

மேலும் இப்பயிர்களுக்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் தொழு உரம், சாணக்கரைசல் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வழக்கமாக 6 மாதத்தில் 4 அடி உயரமே வளரும் செங்கீரை தண்டு எனும் கீரைத் தண்டை வளர்த்துள்ளார்.

இந்த செங்கீரைத் தண்டானது அபரிமிதமான வளர்ச்சியை கண்டு 11 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த அபூர்வ கீரைத்தண்டை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Similar News