தமிழ்நாடு

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2023-02-04 14:05 GMT   |   Update On 2023-02-04 14:05 GMT
  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் வழக்கப்படும்.
  • காயமுற்ற மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.

அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பெண்கள் வாணியம்பாடி அரசு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து. மூச்சுத் திணறல் ஏற்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News