விளையாட்டு

உலக கோப்பை செஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

Published On 2025-11-04 02:06 IST   |   Update On 2025-11-04 02:06:00 IST
  • மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
  • தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

ஃபிடே உலகக் கோப்பை 2025 செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் விளையாடுகிறார்கள்.

மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன் பெருவின் ஸ்டீவன் ரோஜாஸை எதிர்கொண்டார்.

போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்த நிலையில் டைபிரேக்கரில் நாராயணன் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நாராயணனைத் தொடர்ந்து, தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.  

Tags:    

Similar News