விளையாட்டு
கால் வீக்கத்துடன் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்யா
- 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.
- பந்தய தூரத்தை அவர் 56.46s வினாடிகளில் கடந்தார்.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் வரை நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இதில் அவர் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 56.46s வினாடிகளில் கடந்தார்.
இந்த போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு அவரின் சகோதரி நித்யா இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.