டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: பரிசுத்தொகை அதிகரிப்பு

Published On 2025-06-14 04:09 IST   |   Update On 2025-06-14 05:01:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
  • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

Tags:    

Similar News