டென்னிஸ்
Washington Open Tennis: 2வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,
போலந்தின் மக்டலேனா பிரெச் உடன் மோதினார்.
இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.